யாழ். பல்கலை மாணவர்கள் அடிப்படைவாத செயல்களில் ஈடுபட உபவேந்தர் அனுமதி

Report Print Steephen Steephen in அறிக்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட உபவேந்தர் இடமளித்துள்ளமை குறித்து கலாநிதி ராஜன் ஹூல் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை யாழ் நகரில் நடத்திய எழுக தமிழ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு இடமளித்தமை மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரான கலாநிதி ராஜினி திராணகமவின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க அனுமதி மறுத்தமை குறித்தும் ராஜன் ஹூல் கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் எதிர்ப்பு நடவடிக்கையை ஒழுங்கு செய்திருந்தது.

எழுக தமிழ் எதிர்ப்பு நடவடிக்கையானது உண்மையில் தமிழ் மக்களின் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக நடத்தப்படவில்லை எனவும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் உள்ள பனிப் போரின் ஒரு அங்கமே இந்த நடவடிக்கை என சில மிதவாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Latest Offers

loading...

Comments