உதயங்கவை கைதுசெய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்க வேண்டும்

Report Print Kumutha Kumutha in அறிக்கை

இலங்கை விமானப்படையின் மிக் விமானம் கொள்வனவின் போது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ரஸ்யாவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவரிடம் நேரடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவரிடம் விசாரணைகள் மேற்கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக யுக்ரேனில் அவர் தங்கியுள்ள வீட்டிற்கு நீதிமன்ற அறிவிப்பு அனுப்பப்பட்டும் அவர் குறித்த வீட்டில் தற்போது இல்லை என யுக்ரேன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

எனினும் சர்வதேச பொலிஸார் ஊடாக உதயங்க வீரதுங்கவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் இன்று கோரியுள்ளனர்.

அவருக்கு பிடியாணை பிறப்பிப்பதா? இல்லையா? என்ற முடிவானது இந்த மாதம் 30ஆம் திகதி ஆராய்ந்து பார்க்கப்படும் என கோட்டை நீதிவான் நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments