நூலாசிரியராகின்றார் பந்துல - வற் வரி குறித்து ஒரு புத்தகமா?

Report Print Kamel Kamel in அறிக்கை

வற் வரி குறித்து முன்னாள் அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன நூல் ஒன்றை வெளியிட உள்ளார்.

“வெட் அரோவ சஹா விஸ்வாபங்க துர்நிருபன” எனும் பெயரில் இந்த நூல் நாளை வெளியிடப்பட உள்ளது.

கொழும்பு துன்முல்ல பிரதேசத்தில் நாளை மாலை 4.00 மணிக்கு இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் விஸ்வநாத் அபோன்சு ஆகியோர் நூல் பற்றிய திறனாய்வினை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

2002ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரையில் வற்(பெறுமதிசேர்) வரி தொடர்பில் ஏற்பட்ட மாற்றங்கள் நீதிமன்றின் தீர்ப்புக்கள் அரசியல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த நூலில் விபரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers

loading...

Comments