அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Ajith Ajith in அறிக்கை
47Shares

இஸ்ரேலுக்கு எதிரான யுனெஸ்கோ வாக்கெடுப்பின்போது இலங்கை கலந்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

கொழும்பு நகரசபைக்கு முன்னால் அமைந்துள்ள திவட்டகஹா பள்ளிவாசலுக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இஸ்ரேலில் அமைந்துள்ள அல்-அக்சா பள்ளிவாசலை இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்துள்ளமைக்கு எதிரான யோசனைக்காக யுனெஸ்கோ, வாக்கெடுப்பை நடத்துகிறது.

இந்த யோசனைக்கு அமரிக்கா உட்பட்ட நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அதேநேரம் இஸ்லாமிய நாடுகள் இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்கவுள்ளன எனினும் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவை வெளியிட்டு வரும் இலங்கை அந்த வாக்கெடுப்பின்போது பங்கேற்காமை தொடர்பிலேயே இஸ்லாமிய அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

Comments