தமிழர்களை திருப்பி வெட்ட வேண்டும்..!! சிக்கியது ஆதாரம் - குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா?

Report Print Mawali Analan in அறிக்கை
10198Shares

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிய விடாமல் தமக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்துக் கொள்ள சில சதியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன் காரணமாக நாட்டில் கலவர நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தென்னிலங்கை புத்திஜுவிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் தூண்டப்படுகின்றார்கள் என்பதற்கு ஆதார பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளது.

யாழில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்தாக நிகழ்ந்துவரும் சம்பவங்களின் பின்னணியில் மிக முக்கிய சதியாலோசனையாளர்கள் இருந்து செயற்பட்டு வருவது தெளிவாகிவிட்டது.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஊடாக (தென்னிலங்கையில்) மிக வேகமாக பரப்பப்பட்டு வருவது இரு கருத்துகள் மாத்திரமே,

யாழில் இடம் பெற்றது கொலைகளுக்கு காரணம் அரசே, முறைகேடான ஆட்சி நடப்பதாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றது.

திட்டமிட்டே யாழில் சிங்களவர்களை வெட்டியுள்ளார்கள். சிங்கள இனத்தவர்கள் மீதான பழிவாங்களே இதற்கான காரணம்.

இந்த கருத்துகள் மாத்திரமே தென்னிலங்கை தரப்பினரது வாதமாக இருக்கின்றது. இதன் மூலம் ஆட்சி மாற்றத்திற்காக நடத்தப்படும் செயற்பாடுகளே இவை என்பது புலப்படுகின்றது.

தற்போது யாழில் இருந்து சிங்கள செய்தியாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுடன், பேசி உள்ளதாக கூறி காணொளி ஒன்றும் வேகமாக பரப்பப்படுகின்றது. இது சுத்தமாக இனவாதத்தை தூண்டும் ஓர் செயற்பாடாகவே அமைந்துள்ளது.

குறித்த காணொளியில்,

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொலிஸார் மீதான வாள் வெட்டு சம்பவம் மிக பாரதூரமானது. திட்டமிட்டே சிங்கள பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இங்கு எம் மீதும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதே நிலைதான் இங்குள்ள அனைத்து சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் தொடர்ந்து கொண்டு வருகின்றது அச்ச நிலையிலேயே நாம் உள்ளோம்.

எம்மை கொன்று விடுவார்கள் ஆனால் அது திசைதிருப்பப்பட்டு விடும் குற்றம் செய்ததற்காகவே கொல்லப்பட்டார்கள் என கூறிவிடுவார்கள்.

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களை தாக்குவார்கள் நாம் பொறுமை காக்க வேண்டுமா? இதனைபார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது. யாழில் சிங்களவர்களை வெட்ட துணிவு இருக்கின்றது என்றால் அதே போன்று கண்டியில் செய்ய எமக்கு சக்தி இல்லையா?

இவர்களுக்கு (தமிழர்களுக்கு) எங்கிருந்து இத்தகைய துணிவு வந்தது யாழில் இராணுவம் என்ன செய்கின்றது, எமது மக்களுக்காக செயற்பட உண்மையான சிங்களவர்கள் என 50, 100 பேர் கூட இல்லையா? சிங்கள அமைப்புகள் எங்கே சென்றது?

சிங்கள ஊடகவியலாளர்களுக்கு உண்மைகளை எழுத அனுமதி கொடுக்கப்படுவதும் இல்லை பிரதம ஆசிரியர் சொல்லுவதை மட்டுமே எழுத அனுமதி உள்ளது.

அவர்கள் வெட்ட ஆரம்பித்தால் நாங்களும் திருப்பி வெட்ட ஆரம்பித்தால் மட்டுமே இது முடிவுக்கு வரும். ஏன் நாடு முழுவதும் மக்கள் ஒன்று திரண்டு தேர்தல் நடத்தவேண்டும் எனக்கூறி போராட்டம் நடத்த முடியாதா? அனைவரும் ஒன்று திரள வேண்டும். என்ற வகையில் அந்த காணொளி அமைந்துள்ளது.

இந்த காணொளி ஓர் செய்தியாளர் யாழில் இருந்து கூறிய கருத்தாக கூறப்பட்டாலும் உண்மையில் அது யார் கூறியது ஏன் இவ்வாறான செய்திகள் தென்னிலங்கையில் பரப்பப்படுகின்றுது என்பது தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யப்படவேண்டும்.

குறிப்பாக இந்த காணொளியில் பிரபல ஊடகங்களின் பெயர்களும், நபர்களின் பெயர்களும் கூறப்படுகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

நடைபெற்று வரும் சம்பவங்களை தொகுத்து நோக்கும், போது ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதற்காகவே இவை நடாத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் தென்னிலங்கை தரப்பு தற்போது குழப்பத்தை ஏற்படுத்துவது யாழில் இடம் பெற்ற மரணங்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையினை அல்ல முறையான ஆட்சி இல்லை ஆட்சி மாற்றம் வேண்டும் என்பது மட்டுமே.

இதேவேளை ஆட்சி மாற்றத்திற்காக மஹிந்த தரப்பே செயற்பட்டு வருவது தற்போதைய சூழலின் அவதானிக்க முடியுமாக உள்ளது.

தென்னிலங்கை தரப்பில் தற்போது தூண்டப்பட்டு வரும் இனவாதத்தினை உடனடியாக நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும். அதனால் உயிர்ச் சேதங்களும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆகவே திட்டமிட்டு இவ்வாறு முறைகேடான செயற்பாடுகளை செய்து வரும் சதியாளர்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டியது அரசின் முக்கிய பொறுப்பாகும் இல்லாவிடின் பாரதூரமான விளைவுகளை நாட்டு மக்கள் குறிப்பாக தமிழர்கள் சந்திக்க நேரிடும்.

பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தை அரசு தணித்து தமிழர்களுக்கு எதிராக சிங்கள சகோதரர்களை தூண்டிவிடும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது முக்கிய கடமையாகும்.

Comments