வட ஆளுநரின் சிங்கள மொழிக் கடிதத்தை திருப்பி அனுப்பிய பல்கலை மாணவர்கள்

Report Print Suthanthiran Suthanthiran in அறிக்கை
1645Shares

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைக்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதில் கடிதம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதால் குறித்த கடிதத்தை மாணவர்கள் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.

யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு இளைஞர்களினதும் மரணத்திற்கு உரிய தீர்வை முன்னெடுக்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை யாழ் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

இந்த போராட்டத்தின் இறுதியில், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் ஒன்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயகம் மற்றும் ஆளுநரின் செயலாளரிடமும் மாணவர்கள் கையளித்தார்கள்.

குறித்த மகஜருக்கு வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே பதில் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் குறித்த கடிதம் முற்று முழுதாக சிங்கள மொழியில் அமைந்துள்ளதால் தமக்கு இந்த மொழியை புரிந்து கொள்ள முடியவில்லை என பல்கலை மாணவர்கள் அந்த கடிதத்தை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள்.

Comments