சிங்கள மொழிக் கடிதத்தை தமிழில் அனுப்பினார் ஆளுநர் - மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி

Report Print Shalini in அறிக்கை
1047Shares

வடமாகாண ஆளுநர் சிங்கள மொழியில் அனுப்பிய கடிதத்தை மாணவர்கள் திருப்பி அனுப்பிய நிலையில், குறித்த கடிதத்தை ஆளுநர் இன்று தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் - குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு இளைஞர்களினதும் மரணத்திற்கு உரிய தீர்வை முன்னெடுக்குமாறு கோரி கடந்த திங்கட்கிழமை யாழ் மாணவர்கள் ஒன்றிணைந்து ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள்.

இதில், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் ஒன்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயகம் மற்றும் ஆளுநரின் செயலாளரிடமும் மாணவர்கள் கையளித்தார்கள்.

குறித்த அறிக்கைக்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிங்கள மொழியில் பதில் கடிதத்தை நேற்று அனுப்பி வைத்திருந்தார்.

இந்தக் கடிதத்தை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டு யாழ்.மாணவர்கள் ஆளுநருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள்.

இவ்வாறிருக்க இன்று வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அந்தக் கடிதத்தை தமிழில் மொழி பெயர்த்து அனுப்பியுள்ளார்.

Comments