பிள்ளையானின் அடாவடித்தனம் - 'நானாக வரும்வரை என்னை அழைக்க வேண்டாம்'! பொலிஸாருக்கு எச்சரிக்கை

Report Print Reeron Reeron in அறிக்கை
2661Shares

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபையின் அமர்வு முடிவடைந்த பின்பும் வெளியேறாமல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் 65ஆவது சபை அமர்வு இன்று பிற்பகல் 3.15 மணியளவில் முடிவடைந்துள்ளது. எனினும் பிற்பகல் 4 மணிவரை சபையின் அறைக்குள் இருந்து கொண்டு அவசரமாக செல்ல முடியாது என பொலிஸாரிடம் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

“நானாக வெளியில் வரும்வரை என்னை அழைக்க வேண்டாம்” என பாதுகாப்பு பொலிஸாரிடம் பல தடவைகள் தெரிவித்துக்கொண்டு உள்ளேயே இருந்துள்ளார்.

தொடர்ந்து பொலிஸாருடன் பல தடவைகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டும் பிள்ளையான் வெளியில் வராமல் உள்ளேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் சற்று சிந்தித்து அவரை சூட்சுமமாக வெளியே அழைத்து வந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றியுள்ளனர்.

இதன்போது வெளியில் வந்த பிள்ளையான் ஊடகவியலாளர்களை அழைத்து கருத்து பகிர்ந்துள்ளார். அதில்,

“நான் ஒரு மாகாணசபை உறுப்பினர். நீதிமன்றத்தின் உத்தரவிலேயே வந்துள்ளேன். எதிர்க்கட்சித் தலைவரும் நானும் கதைத்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் வெற்றிலை போட்டுக்கொண்டு மரியாதை இல்லாமல் என்னுடன் கதைத்தார். அவருக்கு வெற்றிலை போட்டுக்கொண்டு என்னிடம் வந்து பேச தகுதி இல்லை” என பிள்ளையான் கூறியுள்ளார்.

ஜோசப் பரராஜ சிங்கத்தை கொலை செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments