உடல் எடை அதிகமா ? நிச்சயம் ஆபத்து..

Report Print Kamel Kamel in அறிக்கை
119Shares

2 முதல் 19 வயது வரையிலானவர்களில் 16 வீதமானவர்கள் அதிக உடல் எடையுடன் காணப்படுகின்றனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட தகவல் மையத்தின் பணிப்பாளர் நிபுணத்துவ டொக்டர் வருன குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக உடன் பருமன் தொடர்பான நாளை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை நேற்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பிழையான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்யாமை போன்ற காரணிகளினால் அனைத்து வயது பிரிவுகளைச் சேர்ந்தர்களும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சினைக்கு இலக்காகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களின் இடுப்புப் பகுதி 35 அங்குலத்தை விட அதிகமாகவும், ஆண்களின் இடுப்புப் பகுதி 40 அங்குலத்தை விட அதிகமாகவும் காணப்படுவது ஆபத்தானது.

அதிக உடற் பருமண் இரண்டாம் ரக நீரிழிவு, இருதய நோய்கள், இரத்த அழுத்தம், அதிக கொலஸ்டரால், புற்று நோய் போன்ற நோய்களை உருவாக்க வழியமைக்கும்.

மரக்கறி, பழ வகைகள் மற்றும் தானியங்கள் நிறைந்த சமநிலையான உணவு உட் கொள்ளுதல், எண்ணெய் உடைய உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்யாமை போன்றவற்றினால் உடல் எடை அதிகரிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Comments