கச்சத்தீவின் புதிய தேவாலய திறப்புக்கு தமிழக மீனவர்களுக்கும் அனுமதிக்கோர சென்னை நீதிமன்றம் உத்தரவு

Report Print Ajith Ajith in அறிக்கை
47Shares

கச்சத்தீவில் இலங்கையினால் அமைக்கப்பட்டுள்ள புதிய தேவாலய திறப்பு நிகழ்வுக்கு தமிழக மீனவர்களையும் அனுமதிக்கும் உத்தரவை பெறுமாறு தமிழக அரசுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏ .செல்வம் மற்றும் பி. கலையரசன் ஆகிய நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

இலங்கையினால் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தேவாலய திறப்பு நிகழ்வில் இராமநாதபுரம் மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி பொதுமகன் ஒருவர் தாக்கல்செய்த மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கச்சத்தீவில் இராமநாதபுரம் மீனவர்களே தேவாலயத்தை அமைத்தனர்.

கடந்த 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு உடன்படிக்கையின்படி, இந்த தேவாலய உற்சவங்களுக்கு தமிழக மீனவர்கள் சென்றுவர முடியும் என்பதை மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே புதிய தேவாலய உற்சவத்துக்கு தமிழக மீனவர்களும் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

நேற்று இந்த நிகழ்வு இடம்பெறவிருந்த நிலையில் அதற்கு இந்திய மீனவர்களை அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது

யாழ்ப்பாண ஆயர், கடற்படை அதிகாரிகள், புதிய தேவாலயத்தை அமைத்தவர் ஆகியோர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவினால் இந்த நிகழ்வு நேற்று இடம்பெறவில்லை.

Comments