சிறைச்சாலைக்குள் பிறந்த நாள் விருந்து! மரண தண்டனை கைதியிடம் விசாரணை

Report Print Shalini in அறிக்கை
207Shares

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியான துமிந்த சில்வா, சிறைச்சாலையினுள் பிறந்த நாள் கொண்டாடியதாக, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா தகவல் வெளியிட்டார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிறைச்சாலையினால் நடத்தப்படுகின்ற நிகழ்வை தவிர வேறு எந்த நிகழ்வும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஒருவருக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்குவதன் ஊடாக மற்றவர்களுக்கு தவறான வழிக்காட்டலாக அமைவதாகவும், ஹிருணிகா கூறும் வரையில் அதனை அறிந்திக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறைச்சாலையில் பிறந்த நாள் நிகழ்வு நடத்தப்பட்டதா என ஆணையாளர் அறிக்கை கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments