இருவேறு விபத்தில் இருவர் பலி

Report Print Nivetha in அறிக்கை
46Shares

கல்கமுவ – மஹகல்கடவல பிரதேசத்தில் வான் ஒன்றும் கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவத்தினால் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர் 48 வயதான வானின் சாரதி என தெரியவந்துள்ளதுடன், காயமடைந்த கெப் வண்டியின் சாரதி மற்றும் உதவியாளரும் தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, ஜா-ஹெல - மினுவங்கொடை வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேக கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டியொன்று கவிழ்ந்துள்ளதை தொடர்ந்து அது எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், 60 வயதுடைய ராகமை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே குறித்த விபத்தில் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments