பெலருஸ் நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு யுவதியிடம் கைவரிசையைக்காட்டிய இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரவில கடற் பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குறித்த யுவதியிடம் அதே விடுதியில் பணியாற்றும் மினுவான்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த ஊழியரை மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பெலருஸ் நாட்டைச் சேர்ந்த 27 வயதான பெண்ணே பாதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேகநபரின் வீட்டில் இருந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் 20 யூரோக்கள், 100 டொலர்கள் மற்றும் 8000 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவரை இன்று மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.