நாமலுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு

Report Print Steephen Steephen in அறிக்கை
94Shares

45 மில்லியன் ரூபா கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 8 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் துரிதமாக வழக்கு தாக்கல் செய்யும் என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

கவர்ஸ் கோப்பரேஷன் மற்றும் என்.ஆர்.கன்சல்டேஷன் ஆகிய நிறுவனங்களுடன் செய்த கொடுக்கல் வாங்கல்களில் கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதனையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Comments