முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நாள் அறிவிப்பு

Report Print Nivetha in அறிக்கை
73Shares

எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் செயற்பாடு ஜனவரி 11ஆம் திகதி இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்திற்கு முன்னர் முதலாம் தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களை இனங்காணும் நடவடிக்கையையும் செயற்படுத்துமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் அசௌகரிய நிலைக்கு உள்ளாக்காமலும் அந்த நிகழ்வினை ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments