மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான சோவிற்கு தனது இரங்கல்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சோவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சோ குறித்த பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இதன்போது ஒரு நிகழ்வில் தன்னை சோ மரண வியாபாரி என அழைத்த சந்தர்ப்பத்தையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
குறித்த நிகழ்வை ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ள பிரதமர், சோவின் பேச்சு திறன் தொடர்பில் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் மரண வியாபாரி என மோடியை சடுதியாக வர்ணித்த சோ பின்னர் ஊழலுக்கான மரண வியாபாரி என மோடியை விளித்து சபையை ஆர்ப்பரிக்க செய்தமை குறிப்பிடத்தக்கது.
பன்முகத்திறனுடைய உன்னத அறிவு ஜீவியான சோ மகா துணிச்சல்காரர் எனவும் பிரதமர் புகழாரம் சூடியுள்ளார்.