களுத்துறை நாவல, கல்பொத்த பிரதேசத்தில் பெண் மற்றும் சிறுவனை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய உக்ரைன் பிரஜைக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த உக்ரைன் பிரஜையான பெண்ணொருவரை விடுதலை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு நடந்த இந்த கொலைகள் சம்பந்தமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் உக்ரைன் ஆண் மற்றும் பெண்ணுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.