மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் மூன்று மணிக்கு பொதுச் சந்தையில் அனைத்து வியாபார நிலையங்களையும் மூடியும் வியாபார நிலையங்களுக்கு முன் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும் துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, சந்தை வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டு மலர் அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் யேசுராஜன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் சந்தையின் அனைத்து வர்த்தகர்களும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டு தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.