அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்! குழப்பத்தில் மக்கள்

Report Print Mohan Mohan in அறிக்கை
535Shares

சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வாரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.

உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த நாளில் இருந்தே ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் அவ்வப்போது எழுந்தது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஆவேசமும், பதற்றமும் நிறைந்து காணப்பட்டது.

இதனிடையே, 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த 5ஆம் தேதி இரவு ஜெயலலிதா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அறிவித்தது.

இந்த அறிவிப்பால் ஆவேசம் அடைந்த தொண்டர்கள், அப்போலோ மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஜெயலலிதாவின் மரணத்தை ஜீரணிக்க முடியாத தொண்டர்கள் இன்னும் கவலையில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு இன்று பிற்பகலில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய நபர்...

“மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும்” என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து, ஆயிரம் விளக்கு காவல்துறைக்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக அனைத்து மாடியிலும் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

ஊழியர்கள் இடையே தேவையில்லாத பதற்றத்தை தணிக்க இந்த நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து ஒவ்வொரு மாடியிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு பீதியால் ஊழியர்கள் அதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர்.

ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக தகவல்கள் வௌயாகி வரும் இந்த நிலையில், வெடிகுண்டு பீதியையும் பரப்பிவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் பிரச்சினைகள் எழும், கலவரம் வெடிக்கும், என்று எண்ணியிருந்த அனைவரது எதிர்பார்ப்பிலும் தமிழக மக்கள் சேறு பூசிவிட்டு அமைதியை கடைப்பிடித்தார்கள்.

இந்த அமைதியை குழப்பும் விதமாக இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியானது தமிழகத்தில் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

- Vikatan

Comments