நாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்பு ஒன்றின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ள குறித்த சந்தேகநபரிடம் இருந்து, தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி 100 கிராமுடைய 1200 பெக்கட்கள், விமான நிலைய பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொட்டாரமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று நீர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.