ஹப்புத்தளை - போவ தோட்டத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காய்கறி தோட்டத்தில் இன்று அதிகாலை மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் நோய் காரணமாக தேசிய மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.