இலங்கையில் இதுவரை கண்டிராத பாரியளவான கொக்கேன் மீட்பு

Report Print Nivetha in அறிக்கை

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலொன்றில் இருந்து 800 கிலோகிராம் கொக்கேன் போதைப் பொருள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப்பிரிவினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

ஈக்வதோரில் இருந்து இலங்கை ஊடாக இந்தியா நோக்கி பயணிக்கவிருந்த கப்பலொன்றில் இருந்தே இவ்வாறு குறித்த கொக்கேன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கொள்கலன் ஒன்றில் தேக்கு மரக்குற்றிகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவான கொக்கேன் போதைப் பொருள் ஆகும்.

இதேவேளை, இதன் சர்வதேச மதிப்பு 8000 மில்லியன் ரூபா என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

Comments