பிரதமர் ஒரு போதும் அப்படி கூறவில்லை - நாமல் கூறியதே பொய்!

Report Print Shalini in அறிக்கை
181Shares

ஹம்பாந்தோட்டை ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் கூறியதாக, நாமல் ராஜபக்ச என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். இக்கருத்தை நான் முழுமையாக எதிர்க்கின்றேன் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து,

பிரதமர் இவ்வாறானதோர் கருத்தை வெளியிடவில்லை. நான் இவ்வமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பொழுது நாமல் ராஜபக்சவின் தந்தையின் தேர்தல்கள் பணியில் ஈடுப்பட்ட 582 பேரை பணிநீக்கம் செய்திருந்திருக்கலாம்.

நாமல் ராஜபக்ச இணைத்துக்கொண்ட 200 பேரையும் எம்மால் பணிநீக்கம் செய்திருந்திருக்கலாம். பிரதமரும் ஜனாதிபதியும் ஒரு போதும் அவர்களை பணிநீக்குமாறு கூறவில்லை.

எனவே இவ்வாறு பொய்யுரைத்து புகழை ஈட்டிக்கொள்ள முயற்சிக்க வேண்டாமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பொருட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையின் அளவு அமெரிக்க டொலர்கள் 400 மில்லியன்களென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் கருத்து வெளியிட்டார்.

ஆனால் எங்கள் புத்தகங்களிலோ அமெரிக்க டொலர்கள் 1347 மில்லியன்களென பதிவுச் செய்யப்பட்டுள்ளது. அதாவது 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் தொடர்பாக நாமல் ராஜபக்ச அறிந்திருக்கவில்லை.

மிகுதியான 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எங்குச் சென்றுள்ளன என விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுளளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவணத்திடம் கையளிக்கும் பொழுது தொழில் பாதுகாப்பு தொடர்பாக அதிகபட்ச கவனம் செலுத்தப்படுமெனவும் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகாரசபை என்ற வகையில் நாம் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடும் பொழுது இவ்வூழியர்களின் தொழில்களின் பாதுகாப்பினை உறுதிச்செய்யுமாறு பிரதானமாக கேட்டுக்கொண்டோம்.

மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே மாகப்புர துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. அவர் இப்பிள்ளைகள் மீது உண்மையான அன்பு கொண்டிருப்பாராயின் இவ்வனைத்து பிள்ளைகளும் துறைமுக அதிகாரசபையில் பணிக்கு அமர்த்தியிருந்திருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாகம்புர துறைமுகம் எனும் பெயரில் பிரிதொரு நிறுவனமொன்றினை நிறுவி அவர்களை இணைத்துக்கொண்டார்கள். நிரந்தர நியமணங்கள் வழங்கப்படவில்லை.

இப்பிள்ளைகள் மூன்று ஆண்டுகளாக நாமல் ராஜபக்சவுடனும் மஹிந்த ராஜபக்சவுடனும் அரசியலில் ஈடுப்பட்டுள்ளார். இப்பிள்ளைகள் துறைமுக அதிகாரச்சபைக்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. நானே இப்பிள்ளைகளின் வேலைகளை நிரந்தரமாக்கினேன்.

எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள நிறுவணத்தில் இப்பிள்ளைகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். இச்செயன் முறையை தோற்கடித்து இவர்களின் வாழ்க்கையை சீரழிக்க ஒரு சில தரப்பினர் முயற்சிக்கின்றார்கள்.

இத்தரப்பினரின் தேவைக்கேற்ப இப்பிள்ளைகள் செயற்படுவார்களாயின் இப்பிள்ளைகளின் தொழில்வாய்ப்பு தொடர்பாக என்னால் பொறுப்பு கூற இயலாதென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

Comments