சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நாளை(10) கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வினை கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களின் சங்கம் மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வதுடன் மனித உரிமைகள் பேணலை உறுதிசெய்யுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டு கொள்ளகின்றமை குறிப்பிடத்தக்கது.