கிளிநொச்சியில் காணிப்பிணக்குகளை ஆராயும் கூட்டம்

Report Print Suman Suman in அறிக்கை
53Shares

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(09) காலை 9.30 மணியளவில் மக்களின் காணிப்பிணக்குகள் ஆராயும் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் கரைச்சி, கண்டாவளை, பளை, பூநகரி பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்த மக்கள் தங்களின் காணிப்பிணக்குகளை ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருந்து வந்த காணிப் பிணக்குகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது சில காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், சிலவற்றுக்கு ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கிளிநொச்சிக்கு வருகைத் தந்து குறித்த காணிப் பிணக்குகள் தொடர்பில் ஆராய்வேன் என ஆளுநர் கூறியுள்ளார்.

மேலும் வட மாகாண ஆளுநருடன் வட மாகாண காணி ஆணையாளர் மகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட மேலதி அரச அதிபர் சத்தியசீலன் மற்றும் மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments