இலங்கையை கடுமையாக சாடியுள்ள வெளிநாட்டு ஊடகங்கள்!

Report Print Vino in அறிக்கை

இலங்கை - சீனா கைத்தொழில் செயற்றிட்ட அங்குரார்ப்பன நிகழ்வின்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் அரச ஆதரவாளர்கள் பிக்குகளையும் கிராமவாசிகளையும் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று சில மணிநேரங்களே ஆன நிலையில் வெளிநாட்டு இணையங்களில் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கிவிட்டன.

இலங்கை - சீனா கைத்தொழில் செயற்றிட்ட நிகழ்வுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்குரார்ப்பனம் செய்து வைத்தார்.

இந்த பகுதியினை சீனாவுக்கு கையளிக்கக்கூடாது என்று கோரி பிக்குக்கள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் கிராமவாசிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன் கல் வீச்சிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாகவே கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்களில் இலங்கை அரச ஆதரவாளர்கள் பிக்குகளையும் அந்த கிராமவாசிகளையும் கடுமையாக தாக்கியது என செய்திகள் வெளியிட்ட வண்ணம் உள்ளது.

இந்த இடத்தில் ஆர்ப்பாட்டங்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தக் கூடாது என ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த தாக்குதலின் போது 21 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments