ஹம்பாந்தோட்டையில் இன்று(07) ஆரம்பித்து வைக்கப்பட்ட சீன, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி வலய திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 52பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் மேலும் பலர் தேடப்படுவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் 23பேரை விளக்கமறியலில் வைக்க ஹம்பாந்தோட்ட நீதவான் நீதிமன்றம் இன்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.