மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தில் இராணுவம்

Report Print Ajith Ajith in அறிக்கை
31Shares

தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக நாடுமுழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடுகை செய்யும் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 13,200 இற்கும் அதிகமான பல்வேறு வகையான தாவர வகையைச் சேர்ந்த மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படையினால் 5 ஆயிரத்து 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படையினால் 2 ஆயிரத்து 800 வல்லை மரக்கன்றுகள் படைத்தலைமையக வளாகத்தில் நடுகை செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் மா, எஹெல, வேம்பு, தேக்கு மற்றும் பனை உள்ளிட்ட 2100 மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படையினரும் இத்திட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை தமது வளாகத்தினுள் நடுகை செய்தனர்.

மத்திய பாதுகாப்பு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த படையினர்கள் 2 ஆயிரத்து 400 மரக்கன்றுகளை நடுகை செய்ததுள்ளனர்.

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் இருநூறு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments