சரத் குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு!

Report Print Ramya in அறிக்கை
35Shares

முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை, இந்த மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (09) பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் ,குற்றபுலனாய்வு பிரிவினரால் இந்த மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு கடல்நீரேரி வளர்ச்சி யோசனை நடவடிக்கைக்கு வழங்கிய ரூபாய் 112 இலட்சத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments