இலங்கை அரசாங்கம் மாலைத்தீவு பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளதாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ஒலுவில் துறைமுகத்திலிருந்து காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளுக்காகவே மாலைத்தீவு பாதுகாப்பு படையினரின் உதவியை நாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணாமல் போயிருந்த மீனவர் இருவர் கடந்த புதன் கிழமை மாலைத்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டார்.
கல்முனையிலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆறு பேர் காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த ஆறு பேரில் இருவர் மாலைத்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர்.
ஹாஜா மொஹைதீன், முஹமட் அர்ஜீல் ஆகியோரே மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகாளர் சங்க தலைவர் எம்.எஸ் நஸீர் தெரிவித்திருந்தார்.