இலங்கையின் முதலாவது சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஊவ வெல்லஸ்ஸ வீரர்களை நினைவுகூரும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரப் போராட்ட ஆரம்பம் எனக் கருதப்படும் 1818 ஊவ வெல்லஸ்ஸ போராட்டத்தையும், அதற்கு தலைமைதாங்கிய கெப்பட்டிபொல திஸாவ தலைமையிலான வீரர்களையும் நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகின்றது.
ஊவ வெல்லஸ்ஸ போராட்ட வீரர்களை தேசத் துரோகிகள் பட்டத்திலிருந்து விடுவிப்பதற்கு ஜனாதிபதி அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.