மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை சகோதரருக்கு வழங்கிய நாமல்

Report Print Ajith Ajith in அறிக்கை
109Shares

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை தனது சகோதரரான ரோஹித ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இந்தத் தகவலை தனது டுவிட்டர் வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். ரோஹித ராஜபக்ஸ, இது குறித்து டுவிட்டர் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில்,

'மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வாசிப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

'இந்தப் புத்தகத்தை வழங்கிய சகோதரர் நாமலுக்கு நன்றி' என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த புத்தகத்தை தாம் வாசிக்கும் புகைப்படமொன்றையும் ரோஹித ராஜபக்ச பதிவேற்றம் செய்துள்ளார்.

Comments