இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்

Report Print Ajith Ajith in அறிக்கை
48Shares

இலங்கை அரசாங்கத்தால் தடுத்த வைக்கப்பட்டுள்ள 120 படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த விவகாரம் தொடர்பில் உரிய விளக்கம் கேட்டு விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என அரசாங்க சட்டத்தரணிக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கை ஜனவரி 17ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

Comments