கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்தோம் - நீதிமன்றில் வாக்குமூலம்

Report Print Suman Suman in அறிக்கை
226Shares

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275 கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர்.

குறித்த சந்தேகநபரை இன்று கிளிநொச்சி பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி இருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பாக மன்று சந்தேகநபரை வினவிய பொழுது,

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிற்கு முன்னாள் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும், தாம் சில பிதிர் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் திறந்த மன்றில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஆலயத்தின் பதிவு மற்றும் ஆலயத்தை சோதனையிட நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய கிளிநொச்சிப் பொலிஸார் மற்றும் கரச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அமல்ராஜ் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் கிராம அலுவலர் கின்சான்கொல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரெயிநோலட் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் எவ்விதமான சந்தேகத்திற்குரிய பொருட்களும் மீட்கப்படவில்லை.

அத்துடன் குறித்த ஆலயம் பதிவற்ற ஆலயம் என்பதுடன் தனியார் காணி ஒன்றில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதுடன் ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments