ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

Report Print Ramya in அறிக்கை
2228Shares

பதுளையில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பதுளை மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு கண்டக்கெட்டிய பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரின் கொலை வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments