இலங்கையிருந்து 2 கோடி 80 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஈரான் பிரஜையொருவர், தனது பயணப்பையில் இவ்வாறு குறித்த பணத்தொகையை மறைத்து வைத்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கட்டாருக்கு கொண்ட செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரின் பயணப்பை சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது அதில் 2 இலட்சத்து 77 ஆயிரம் யூரோ நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.