பல வருடங்களாக மருத்துவனையில் தங்கியிருக்கும் வயோதிப பெண்! சோகமான பின்னணி என்ன?

Report Print Nivetha in அறிக்கை

பல வருடங்களாக மருத்துவனையில் தங்கியிருக்கும் வயோதிப பெண் பற்றி இணையத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் இரண்டு வருடங்களாக பொறுப்பாளர் இல்லாத காரணத்தினால் நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் பெண் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணுக்கு தற்போது 65 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாய்பேச முடியாத குறித்த பெண் சிகிச்சைக்காக இதற்கு முன்னர் மருத்துவனைக்கு வந்துள்ளதாக மருத்துவமனையின் பணியாளர்கள் தெரிவித்துள்ளார்.

தினமும் காலை நேரம் முழுவதும் வெளி நோயாளர் பிரிவில் அமர்ந்திருக்கும் இந்தப் பெண், தன்னைத் தேடி தனது உறவினர்கள் எவரேனும் வந்திருக்கிறார்களா என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தேடிப் பார்ப்பதாகவும், வரவில்லை என்றவுடன் ஏமாற்றத்துடன் கண்கலங்கி நிற்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இவர் தொடர்பான முழுமையான விடயங்கள் கிடைக்க பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments