கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் கட்சியொன்றின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முக்கியஸ்தர் ஒருவர் இன்று கைது செய்யப்படலாம் என்று தெரிய வருகின்றது.
இவருக்கு எதிரான விசாரணைகள் கடந்த பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் , இவர் மீது கடவுச்சீட்டு மோசடி, ஜனாதிபதி செயலக வாகன மோசடி, அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் துஷ்பிரயோகம் போன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதங்களில் பல தடவைகள் நிதி மோசடிப்பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் இவர் இன்று நிதி மோசடிப் பிரிவினரால் கைது செய்யப்படலாம் என்றும் பெரும்பாலும் பதினான்கு நாட்கள் வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்னதாக இவரது மனைவியும் நிதி மோசடிப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
அத்துடன் இளைஞர் ஒருவரின் மர்ம மரணம் தொடர்பிலும் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.