பசிலின் மல்வானை இல்லத்தின் மதிப்பீட்டு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

Report Print Nivetha in அறிக்கை
94Shares

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வானை இல்லத்தின் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், குறித்த இல்லத்தை சோதனையிடுவதற்கு நீதிமன்ற அதிகாரிகள், நீதி அமைச்சிடம் நிதி ஒதுக்கீடுகளைக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மல்வானையிலுள்ள குறித்த இல்லத்தை திறந்த ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மல்வானையில் 16 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டமை மற்றும் அதில் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பில் நிதி மோசடி குற்றத்தின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments