தென் மாகாண சபையில் அமைதியற்ற நிலை..!

Report Print Nivetha in அறிக்கை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காணிகளை வழங்குவது தொடர்பில் தென் மாகாண சபையில் இன்று அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தென் மாகாண சபையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள், காணிகள் வழங்குவது தொடர்பில் கேள்வி எழுப்பியதாலேயே இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அரச உடமைகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர் இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments