ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு !

Report Print Nivetha in அறிக்கை

படுகொலைசெய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் மனைவியின் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. எம். சுமந்திரனால் குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணைத் திகதி இதுவரை குறிக்கப்படவில்லை. இது குறித்து சட்டத்தரணி சுமந்திரன் கருத்து வெளியிடுகையில்,

வழங்கிய தீர்ப்பிலுள்ள சட்டவிரோதமான தீர்வுகள் தொடர்பாக இந்த மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும்போது மீள்விசாரணையொன்றை ஏற்படுத்துமாறு இதில் கோரியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments