யாழில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் காயம்

Report Print Sumi in அறிக்கை

சட்ட விரோதமாக மணல்ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தினை தடுத்து நிறுத்த பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் போது கனரக வாகனம் அருகில் நின்ற பேருந்து ஒன்றின் மீது மோதியதால் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

யாழ்.பருத்தித்துறை மந்திகை கிராமக் கோடு பகுதியில் இன்று (10) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹன்டர் ரக வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் திருட்டு மணலை ஏற்றிச் சென்றுள்ளனர்.

மந்திகை கிராமக் கோடு பகுதியில் வைத்து பொலிஸார் வாகனத்தினை மறித்த போது, வாகனத்தினை நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வாகனம் கட்டுப்பாட்டினை மீறி பயணித்து அந்தப்பகுதியில் நின்ற பேருந்து ஒன்றின் மீது மோதியதில் பஸ்ஸில் இருந்த இருவர் மற்றும் வீதியில் நின்ற இருவருமாக நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், திருட்டு மணல் ஏற்றிச் சென்ற பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments