வரலாற்றில் முதற்தடவையாக புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!

Report Print Ajith Ajith in அறிக்கை

வெளிநாடுகளில் வேலை செய்யும் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மத்துகம புலம்பெயர் வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ள அவர், பதிவு செய்துகொள்ளாத தொழிலாளர்கள் ஓய்வூதிய அனுகூலங்களை இழக்க நேரிடும்.

வரலாற்றில் முதற்தடவையாக, புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து நலன்களைப் பெற்றுக்கொடுப்பது. அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.

Comments