வறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த கோரி மின்சக்தி எரிசக்தி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
மின்சார நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு தனியார் துறையினரிடம் இருந்த 60 மெகா வோல்ட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், எக்காரணம் கொண்டும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது எனவும் கூறினார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 35 விதமாக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்ட மாட்டாது.
இதற்காக 3 தனியார் துறை நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள, அவற்றுடனான ஒப்பந்தத்தை இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ச்சியான மின்சார வழங்கலை உறுதி செய்யுமுகமாக 06 மாத கால குறுகிய மின்உற்பத்திக்காக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், திறந்த விலை மனுக்கோரலின்ஊடாக 60 மெகாவொட் கொள்ளளவினை கொண்ட ஜெனரேட்டர்களை கொள்வனவு செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்;ஜித்சியம்பலாப்பிட்டியவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு நேற்ற முன்தினம் இடம்பெற்றஅமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.