இலங்கையின் பிரபல சிங்கள மொழிப் பாடகர் காலமானார்

Report Print Nivetha in அறிக்கை
271Shares

பிரபல சிங்கள மொழிப் பாடகர் தீபால் டி சில்வா இன்று (14) அதிகாலை காலமானார்.

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , உயிரிழக்கும் போது அவருக்கு வயது 50 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபால் சில்வாவின் சடலத்தை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு தீர்மானம்

இன்று அதிகாலை காலாமான பிரபல பாடகர் தீபால் சில்வாவின் சடலத்தினை இன்று மாலை கிரிபத்கொடை - மாகொல வீதியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments