சட்டவிரோத சிகரட்களுடன் காரில் சிக்கிய சந்தேக நபர்கள்

Report Print Nivetha in அறிக்கை
67Shares

தம்புள்ளை - பனம்பிடிய பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உரு தொகை சிகரட்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், கார் ஒன்றில் சிகரட் தொகைகளுடன் பயணித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சிகரட்டின் பெறுமதி 70 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, 21 மற்றும் 31 வயதுடைய அரணாயக்க பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments