அல் கைதா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் கொலை

Report Print Shalini in அறிக்கை
445Shares

அல் கைதா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவன் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அல் கைதா தீவிரவாத இயக்கம் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்ட்டகான் ஊடகத்துறை செயலாளர் பீட்டர் குக் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யேமன் நாட்டுக்கு உட்பட்ட பய்டா என்ற பகுதியில் அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் அராபிய தீபகற்பத்தில் செயல்பட்டு வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அப்ட் அல்-கானி அல்-ரஸாஸ் என்பவன் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments