அமரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
வோசிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இலங்கையின் தூதுவர் பிரசாத் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது பதவியாண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்னர் இலங்கை, சர்வதேச நாடுகள் மற்றும் அமரிக்காவுடன் சிறந்த நல்லுறவை பேணி வருவதாக காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.