துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக பலி

Report Print Nivetha in அறிக்கை
147Shares

ஹோமாகம புகையிரத வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கொன்றில் முன்னிலையாகிய பின்னர் மீண்டும் வரும் வழியிலேயே இந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்பிக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவேளை, உயிரிழந்துள்ளவர் மீகொடை - காமினிபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments