சீகிரிய குன்றின் கல்வெட்டுகளுக்கு பாதிப்பு : ஓவியங்கள் அழிவடையும் அபாயம்

Report Print Nivetha in அறிக்கை
74Shares

சீகிரிய குன்றில் ஒரு வகை பங்கஸ் பரவி வருவதன் காரணமாக கல்வெட்டுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டுகளில் சில இடங்களில் பரவியுள்ள பங்கஸ் காரணமாக அவற்றில் எழுப்பட்டுள்ள சிறுக்கல் பாக்கள் மறைத்து போகும் நிலைமை உருவாகியுள்ளது.

இவற்றை அகற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசியர் பிரியஷாந்த குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீகிரியா ஓவியங்கள் காணப்படும் பகுதிகளிலும் ஒரு வகை பங்கஸ் படிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாக விளங்கும் சீகிரியாவின் ஓவியங்களை பார்வையிட, நாடெங்கிலுமிருந்து அன்றாடம் பலர் வருகைதந்தவண்ணமுள்ளனர்.

அத்துடன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இங்கு செல்ல தவறுவதில்லை. இந்நிலையில், நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் பெரும்பங்காற்றும் சீகிரிய ஓவியங்களை காக்கவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்பதும் சுட்டிக்காட்ட தக்க விடயமாகும்.

Comments